search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை தீப மலை"

    திருவண்ணாமலை மகா தீபம் அணைந்துவிட்டதாகக் கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. #TiruvannamalaiArunachaleshwartemple
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    தினமும் காலை, இரவு வேளைகளில் சாமி வீதி உலாக்களுடன் தீபத் திருவிழா களை கட்டியது. விழாவின் 10-ம் நாளான கடந்த 23-ம்தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீப தரிசனம் செய்தனர். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 11 நாள்கள் எரியும். தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்குத் தெரியும்.

    இந்த நிலையில், மகா தீபம் அணைந்துவிட்டதாகக் கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

    இதையடுத்து, வேலூர் மாவட்டம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

    இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    மகா தீபம் அணையவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

    இதுபோன்ற தவறான தகவல்களைச் சமூக வலை தளங்களில் பரப்புவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TiruvannamalaiArunachaleshwartemple
    திருவண்ணாமலை தீப மலையில் தடையை மீறி ஏறிய பெண்கள் உள்பட 12 வெளிநாட்டினரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். #ThiruvannamalaiMountain #ForeignersArrested
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மகா தீப மலையில் ஏறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில் குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தடையை மீறி தீப மலையில் ஏறினால் கைது நடவடிக்கை பாயும் என வனத்துறையினர் எச்சரித்திருந்தனர்.



    ஆனாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் அடிக்கடி தீப மலையில் ஏறி சிக்கி கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் ரஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தடையை மீறி மலையில் ஏறி மாயமாகினர்.

    3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவர்களை வனத்துறை குழுவினர் மீட்டனர். இந்த நிலையில், இன்று காலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணா ஆசிரமம் பின்புறம் இருக்கும் கந்தாசிரமம் வழியாக வெளிநாட்டை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 12 பேர் தடையை மீறி தீப மலையில் ஏறினர்.

    இதுப்பற்றி, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. வனத்துறையினர் விரைந்து சென்று மலையில் ஏறிய 12 வெளிநாட்டினரை கைது செய்தனர். அவர்கள், ஐரோப்பியா லிக்டோனியா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர்கள், தீப மலையை சுற்றி பார்க்க ஏறியுள்ளனர். இதையடுத்து, அபராதம் விதித்த பிறகு 12 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ThiruvannamalaiMountain #ForeignersArrested



    ×